சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி போட்டிக்கு செக் குடியரசின் 17 வயதேயான லிண்டா ஃப்ருஹ்விர்டோவா முன்னேறி அசத்தியுள்ளார்.
நாளை மாலை 5 மணிக்கு துவங்க இருக்கும் இறுதி போட்டிகளை துவங்கி வைத்து பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
சர்வதேச மகளிர் டென்னிஸ் சென்னை ஓபன் தொடர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் கடந்த 12ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெற்ற தொடர் இறுதிகட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை ஓபன் தொடரின் அரைஇறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன.
அரை இறுதியின் ஒற்றையர் பிரிவில் 17 வயதேயான லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, நாடியா போடோரோஸ்காவை எதிர்த்து விளையாடினர். இரண்டு வீராங்கனைகளும் இந்த தொடர் முழுவதும் நல்ல பார்மில் உள்ளதால் போட்டி துவங்கியது முதல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. கிட்டத்தட்ட 1 மணி நேரம் 17 நிமிடம் நடைபெற்ற முதல் செட்டில் 7-5 என நாடியா போடோரோஸ்கா வெற்றி பெற விடா முயற்சியுடன் ரசிகர்களின் ஆதரவோடு தொடர்ந்து விளையாடிய லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, கிட்டத்தட்ட 2 மணி நேரம் 54 மணி நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-4,6-2 என அடுத்த இரண்டு செட்கலை வென்று போட்டியில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
அரை இறுதியின் மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் great britian வீராங்கனை கேட்டி ஸ்வான் காயம் காரணமாக வெளியேற இறுதி போட்டிக்கு போலந்து வீராங்கனை மக்டா லினெட்டே முன்னேறினார்.
நாளை மாலை 5 மணிக்கு துவங்கவுள்ள இறுதி போட்டியில் இரட்டையர் பிரிவில் லூயிசா ஸ்டேபானி,கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி இணை ஆனா பிளிங்கோவா , நட்டாலியா Dzalamidze இணையை எதிர்த்து விளையாடுகின்றனர். அதன் பின் நடைபெறும் ஒற்றையர் பிரிவில் லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, மக்டா லினெட்டே- வை எதிர்த்து விளையாடுகிறார்.