விளையாட்டு

சொந்த மண்ணில் வெற்றி: தோனியின் சாதனையை சமன் செய்த கோலி!

சொந்த மண்ணில் வெற்றி: தோனியின் சாதனையை சமன் செய்த கோலி!

jagadeesh

சென்னையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை வென்றதையடுத்து கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சொந்த மண்ணில் தனது 21 ஆவது வெற்றியை பதிவு செய்தது. இதனையடுத்து தோனி தலைமையிலான இந்திய அணி பெற்ற 21 டெஸ்ட் வெற்றியை சமன் செய்தார் விராட் கோலி.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்களை சேர்த்தது. இதில் ரோகித் சர்மா 161 ரன்கள் குவித்தார். பின்பு முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அஸ்வின் 106 ரன்களை விளாசினார்.

இதனையடுத்து, இங்கிலாந்து வெற்றி பெற 482 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்தியா. இதில் இலக்கை எட்ட முடியாமல் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அக்ஸர் படேல் 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இதனையடுத்து இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஆவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அகமதாபாத்தில் மார்ச் 4 ஆம் தேதி தொடங்குகிறது.

சென்னை வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் பெற்ற 21 டெஸ்ட் வெற்றிகள் என்ற சாதனையை விராட் கோலி சமன் செய்துள்ளார். இந்திய அணிக்கு 33 டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய விராட் கோலி மொத்தம் 21 வெற்றிகளை பெற்றுள்ளார்.