விளையாட்டு

பும்ப்ரா வீசிய நோ-பால் இதற்காவது உதவுகிறதே..!

பும்ப்ரா வீசிய நோ-பால் இதற்காவது உதவுகிறதே..!

webteam

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பின்ஷிப் இறுதிப்போட்டியில் பும்ரா வீசிய நோ-பாலும் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம். ரசிகர்களால் மறக்கமுடியாத அந்த நோ-பாலை தொடர்புபடுத்தி ராஜஸ்தான்  போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு மீம்ஸ் ஒன்றை உருவாக்கி உள்ளனர். அதனை  சமூக வலைத்தளத்தில் பதிவு செய்ய அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது அந்த மீம்ஸ்.
பும்ரா நோபால் வீசிய புகைப்படத்தையும், சாலையில் கறுப்பு வெள்ளைக் கோட்டைத் தாண்டாமல் நிற்கும் கார்களின் புகைப்படத்தையும் இணைத்து மீம் ஒன்றை உருவாக்கியுள்ளது ராஜஸ்தான் போக்குவரத்து காவல்துறை. மேலும் அந்த மீமில் 'கோட்டை கடந்தால் கொடுக்கும் விலை என்னவென்று உங்களுக்குத் தெரியும். எனவே கோட்டை தாண்ட வேண்டாம்' என்று பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து ராஜஸ்தான் போக்குவரத்து போலீஸ் கமிசனர் சஞ்சய் அகர்வால் கூறும்போது, கிரிக்கெட் சம்பவத்தை தொடர்புபடுத்தி மக்களுக்கு மெசேஜ் சொல்லியிருப்பதால் இந்த விழிப்புணர்வு மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன் ட்ராபி  இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதியது. அப்போது பும்ரா வீசிய பந்தில் ஜாமர் கேட்ச் ஆனார். ஆனால், பும்ரா வீசியது நோ-பால் எனத் தெரியவந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஜாமர் 111 ரன்களை குவித்தது பாகிஸ்தான் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பும்ப்ரா வீசிய இந்த பாலை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் விரைவில் மறந்து விட மாட்டார்கள்.  தற்போது பும்ரா வீசிய அந்த நோபால் ராஜஸ்தான் போக்குவரத்துத் துறைக்கு உதவியுள்ளது.