விளையாட்டு

கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பிரேசில்

கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது பிரேசில்

jagadeesh

கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் பெருவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரேசில்.

கால்பந்தாட்ட உலகில் பிரசித்தி பெற்ற தொடர்களில் ஒன்று கோபா அமெரிக்க கால்பந்து தொடர். 1916 முதல் நூற்றாண்டை கடந்து நடத்தப்பட்டு வரும் பாரம்பரியமிக்க தொடர். கடந்தாண்டு அர்ஜென்டினாவில் நடைபெற இருந்த இந்தத் தொடர் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்தாண்டு பிரேசிலில் ஜூன் 12 ஆம் தேதி முதல் இந்தப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டி ஜூலை 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இந்தத் தொடரில் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பெரு - பிரேசில் அணிகள் இன்று அதிகாலை மோதின. இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் முன்னிலைப் பெற கடுமையாக போராடின. ஆனால் ஆட்டத்தின் முதல் பாதியின் 35-ஆவது நிமிடத்தில் பிரேசிலின் லூகாஸ் பக்கேடா முதல் கோலை பதிவு செய்தார். இதனால் இந்தப் போட்டியில் பிரேசில் முன்னிலைப் பெற்றது. மேலும் பெருவின் அடுத்தடுத்து கோல் போடும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து இந்தப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்திய கோபா அமெரிக்கா கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றது பிரேசில். இந்தத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி அர்ஜென்டினா - கொலம்பியா இடையே நாளை நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றிப் பெறும் அணி, ஜூலை 12 இல் நடைபெற இருக்கும் இறுதிப் போட்டியில் பிரேசிலை எதிர்கொள்ளும்.