விளையாட்டு

மைதானத்திற்குள் நுழைந்த அதிகாரிகள்: அர்ஜென்டினா-பிரேசில் ஆட்டத்தில் நடந்தது என்ன?

மைதானத்திற்குள் நுழைந்த அதிகாரிகள்: அர்ஜென்டினா-பிரேசில் ஆட்டத்தில் நடந்தது என்ன?

kaleelrahman

பிரேசில் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில், வீரர்கள் கொரோனா விதிகளை மீறியதாகக் கூறி சுகாதாரத்துறை அதிகாரிகள், மைதானத்தினுள் நுழைந்ததால் பதற்றம் ஏற்பட்டது.

அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க எமி மார்டினெஸ், கிறிஸ்டியன் ரொமேரோ உள்ளிட்ட நான்கு வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து பிரேசில் சென்றுள்ளனர். பிரேசில் நாட்டு கொரோனா தடுப்பு விதிமுறைகள் படி இங்கிலாந்தில் இருந்து வருபவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவது கட்டாயம். ஆனால் இந்த 4 வீரர்களும் அதனை மீறி போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

எனவே போட்டி நடைபெற்று கொண்டிருந்த போதே பிரேசில் சுகாதாரத்துறை அதிகாரிகள் மைதானத்தினுள் நுழைந்து வீரர்களை அழைத்து செல்ல முயன்றனர். அப்போது சக வீரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.