விளையாட்டு

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பை!

JustinDurai

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் டி காக் 40 ரன்களும், பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 35 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் சார்பில் விஜய் சங்கர் மற்றும் முஜிப் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு வார்னரும், பேர்ஸ்டோவும் சிறப்பான தொடக்கம் தந்தனர்.

எனினும் பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மும்பை பந்தைவீச்சை சமாளிக்க முடியாமல் ஹைதராபாத் அணி 19.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை வீரர்கள் ட்ரன்ட் போல்ட், ராகுல் சஹார் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.