விளையாட்டு

என்ன கே.எல்.ராகுல் துணை கேப்டனா? அப்போ ரோகித் சர்மாவின் நிலை? வைரலான விவாதம்!

என்ன கே.எல்.ராகுல் துணை கேப்டனா? அப்போ ரோகித் சர்மாவின் நிலை? வைரலான விவாதம்!

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 

அண்மையில் இந்த தொடரில் விளையாட உள்ள வீரர்களின் விவரத்தையும் பிசிசிஐ வெளியிட்டது.

இந்நிலையில் இளம் வீரர் கே.எல்.ராகுலை டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு துணை கேப்டனாக அறிவித்துள்ளது பிசிசிஐ. 

இந்திய கிரிக்கெட் அணியின் முழுநேர துணை கேப்டனாக உள்ள ரோகித் ஷர்மா காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடுவது சிக்கலாகியுள்ளது. மூன்று விதமான கிரிக்கெட் பார்மெட்டுகளிலும் ரோகித் ஷர்மா விளையாடாத நிலையில் அவருக்கு மாற்றாக துணை கேப்டன் பொறுப்பை ராகுல் கவனிக்க உள்ளார். 

ரோகித் மற்றும் ராகுலுக்கு இடையே சில ஒற்றுமைகளும் உள்ளன… 

இருவரும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தங்களது கிரிக்கெட் கெரியரை ஆரம்பித்தனர். அதே போல இருவரும் இந்தியாவுக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகவும் களம் இறங்கியுள்ளனர். 

மேலும் ஐபிஎல் தொடரில் ரோகித் மும்பை அணியையும், ராகுல் பஞ்சாப் அணியையும் வழிநடத்தி வருகின்றனர். 

ரோகித் மற்றும் ராகுல் என இருவரும் ஐபிஎல் அரங்கில் சிறப்பான முறையில் வழிநடத்தி வருகின்றனர். 

மும்பையை நான்கு முறை சாம்பியனாக்கியுள்ளார் ரோகித். ராகுல் பஞ்சாப்பை முதல்முறையாக சாம்பியனாக்க வேண்டுமென்ற முனைப்பில் இயங்கி வருகிறார். அதன் வெளிப்பாடு தான் பஞ்சாப் தொடர்ந்து போட்டிகளில் நடப்பு சீசனில் வென்று வருகிறது. 

துணை கேப்டன் பதவியும் ராகுலுக்கு நடப்பு ஐபிஎல் சீசனின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. பேட்ஸ்மேனாக லீடிங் ரன் ஸ்கோரராகவும், கேப்டனாக திறம்பட அணியை வழிநடத்தி செல்லும் தலைவனாகவும், விக்கெட் கீப்பராகவும் ராகுல் ஜொலித்து வருகிறார். 

மறுபக்கம் ரோகித் கேப்டனாக ஜொலித்தாலும் ஃபார்ம் மற்றும் பிட்னெஸில் சொதப்புகிறார். 

அவரது காயம் ராகுலுக்கு இந்திய அணியில் புதிய டாஸ்க்கை கொடுத்துள்ளது. 

“என் வாழ்வின் பெருமைமிகு மற்றும் சந்தோஷமான தருணங்களில் இது ஒன்று. நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை. இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும், அதில் உள்ள சவால்களை சந்திக்கவும் நான் தயார். எனது சிறப்பான பங்களிப்பை அணிக்காக நிச்சயம் கொடுப்பேன்” என ராகுல் தெரிவித்துள்ளார்.  

ரோகித் சர்மா இடம்பெறாத ஆட்டங்களில் கே.எல்.ராகுலுக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து வந்த விராட் கோலி தற்போது துணைக் கேப்டனாகவும் ஆக்கியுள்ளார்.

அதே நேரத்தில் கே.எல்.ராகுலுக்கு அணியில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் குறித்து சிலர் கேள்விகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.