விளையாட்டு

ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக அவதரித்த ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஷஸ் தொடரில் வர்ணனையாளராக அவதரித்த ஆஸ்திரேலிய பிரதமர்

EllusamyKarthik

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டியில் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியை மூன்றாம் நாளான இன்று பார்க்க வந்திருந்த ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் திடீரென கமெண்ட்ரி பாக்ஸுக்குள் நுழைந்து மைக்கை பிடித்து, போட்டி வர்ணனையாளராக சில நிமிடங்கள் மாறியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட், ஈஷா குஹாவுடன் இணைந்து சில நிமிடங்கள் பேசி இருந்தார் அவர். 

“இங்கே இருப்பதை மிகவும் சிறப்பானதாக நான் பார்க்கிறேன். இந்த அற்புதமான போட்டியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளனர். அதுவும் இந்த பிங்க் டெஸ்ட் போட்டி மெக்ராத் அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் விதமாக நடத்தப்பட்டது வருகிறது. நல்லதொரு நோக்கத்துடன் நடைபெறும் இந்த போட்டியில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி.

எங்கள் அரசு மெக்ராத் அறக்கட்டளைக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஆஸ்திரேலியர்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அணிகள் சிட்னி மைதானத்தில் பிங்க் டெஸ்டில் விளையாடுவது சிறப்பானதாகும். அந்த அணிகள் மட்டுமல்லாது அவர்களை சப்போர்ட் செய்பவர்களும் இந்த போட்டிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் வெற்றி அதில்தான் அடங்கி உள்ளது” என தெரிவித்துள்ளார் அவர். 

ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மெக்ராத், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நிதி திரட்டும் நோக்கத்தில் சிட்னி மைதானத்தில் நடைபெறும் பிங்க் டெஸ்ட் போட்டியை ஒருங்கிணைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.