ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மாரிசன், கூல்ட்ரிங்ஸ் கொண்டு சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. முன்னதாக, கான்பெராவில் இலங்கை அணிக்கும் பிரதமர் லெவன் அணிகளுக்கும் இடையிலான டி20 பயிற்சி ஆட்டம் நேற்று நடந்தது. முதலில் ஆடிய இலங்கை அணி, 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. பிறகு களமிறங்கிய பிரதமர் லெவன் அணி, 19.5 ஓவர் களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது இன்ப அதிர்ச்சியான சம்பவம் நடைபெற்றது.
இலங்கை அணி பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, 16-வது ஓவரில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், டிரிங்ஸ் எடுத்துக்கொண்டு மைதானத்துக்குள் சென்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. போட்டியைக் காண வந்திருந்த அவர், திடீரென்று கூல்ட்ரிங்ஸ் எடுத்துகொண்டு மைதானத்துக்குள் ஓடினார். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அதை வழங்கிய அவர், வாழ்த்துகளைக் கூறிவிட்டுத் திரும்பினார்.
பிரதமரின் இந்தச் செயலுக்கு கிரிக்கெட் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் சமூக வலைத்தளங் களில் தெரிவித்து வருகின்றனர்.