விளையாட்டு

பெண்கள் விளையாட்டின் முன்னோடி... பழம்பெரும் ஆஸ்தி. கிரிக்கெட் வீராங்கனை மறைவு!

பெண்கள் விளையாட்டின் முன்னோடி... பழம்பெரும் ஆஸ்தி. கிரிக்கெட் வீராங்கனை மறைவு!

webteam

ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் டெஸ்ட் வீராங்கணையான நார்மா ஜான்ஸ்டன் தனது 95 வது வயதில் காலமானார். இவருடன் விளையோடியோரில் இவர் மட்டுமே தற்போது உயிரோடு இருந்ததாக சொல்லப்பட்டது.

1948 ஆம் ஆண்டு முதல் 1951 ஆம் ஆண்டு வரை 7 டெஸ்ட் தொடர்களில் இடைநிலை பேட்ஸ்மேனாக நார்மா விளையாடியவர் நார்மா ஜான்ஸ்டன். இந்நிலையில் இன்று அவர் இறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவரது மறைவிக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். ஜான்ஸ்டன் 1948 இல் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் புகழ்பெற்ற பெட்டி வில்சன் என்பவருடன் அறிமுகமானார். தனது 7 ஆட்டங்கள் மூலம் நார்மா 151 ரன்கள் எடுத்து, 22 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார் அவர்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ட்வீட் வழியாக நார்மலுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ட்வீட்டில் அவர், “இன்று காலை நார்மாவின் மறைவு செய்தி கேட்டு மிகவும் கவலைக்குள்ளானேன். நார்மா பெண்கள் விளையாட்டின் முன்னோடியாக இருந்தவராவார். இறக்கும் வரை ஆஸ்திரேலியாவின் மூத்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் அவர் இருந்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அவர் செய்த பங்களிப்பும், விளையாட்டு வீரர்கள் பலருடன் அவர் கொண்டிருந்த நட்பும் என்றென்றும் நிலைத்திருக்கும்” என்று ட்வீட் செய்துள்ளார். இதேபோல “ஆஸ்திரேலிய மக்கள் அனைவரும் நார்மாவின் மறைவைக் கேட்டு வேதனையடைந்துள்ளனர். நார்மா, ஆஸ்திரேலிய பெண் கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் ஒரு முன்னோடியாக விளங்கினார்” என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் தலைமை நிர்வாகி நிக் ஹாக்லி கூறியுள்ளார்.