சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையை அஸ்வின் நிகழ்த்தியுள்ளார். மேலும் இதேபோன்று 100 ஆண்டுகளுக்கு முன்புதான் நடந்துள்ளதுதான் சுவாரஸ்யம்.
சென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா, ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
அப்போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் பர்ன்ஸை முதல் பந்திலேயே அவுட்டாக்கினார் அஸ்வின். இதுபோல 100 ஆண்டுகளுக்கு முன்புதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் விக்கெட் வீழ்த்திய நிகழ்வு நடந்துள்ளது. அதாவது டெஸ்ட் கிரி்க்கெட்டின் முதல் பந்திலேயே சுழற்பந்துவீச்சாளர் ஒருவர் விக்கெட் வீழ்த்துவது என்பது அபூர்வமானதாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 1907 இல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் இதேபோன்ற சாதனையை நிகழ்த்தினார். அவருக்கு முன்னதாக இங்கிலாந்தின் பாபி பீல் இதனை நிகழ்த்தியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் இதுவரை மூன்று விக்கெட் வீழ்த்துஇயுள்ளார்.