பெங்களூரு மைதானத்தில் பாரம்பரிய ஆடைகளுடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரம்ஜான் கொண்டாடினார்கள்.
ஆப்கான் அணி டெஸ்ட் போட்டிகளில் விளையாட சமீபத்தில் தான் ஐசிசி அனுமதி அளித்தது. அதன் பிறகு, தனது முதல் போட்டியில் ஆப்கான் இந்திய அணியுடன் விளையாட முடிவெடுத்தது. அதன்படி பெங்களூரு மைதானத்தில் இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஷிகர் தவான், முரள் விஜய் சதம் அடிக்க முதல் நாளில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்தனர். இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இதில், போட்டி தொடங்குவது முன்பு ஆப்கான் வீரர்கள் தங்களது பாரம்பரிய ஆடையான குர்தா அணிந்து மைதானத்திற்குள் வந்தனர். அப்போது, ஆப்கான் வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜானை கொண்டாடினர்.