Achraf Hakimi Twitter
விளையாட்டு

ஜீவனாம்சம் கொடுப்பதிலிருந்து தப்பித்த பிரபல கால்பந்து வீரர்.. ட்விஸ்ட்டில் முடிந்த விவாகரத்து!

மொராக்கோவில் விவாகரத்து பெறும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்கும் வகையில் சட்டம் இருப்பதால் ஹக்கிமியின் சொத்தில் பங்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஹிபாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Justindurai S

மொராகோவை சேர்ந்த 24 வயதான கால்பந்து வீரர் அக்ரஃப் ஹக்கிமி, தனது அசாத்தியமான விளையாட்டு திறமையால் ரசிகர்களை கவர்ந்து உலக அளவில் புகழ் பெற்றவர். அண்மையில் அவரை பாரீஸ் செயிண்ட் ஜெர்மாயின் (பி.எஸ்.ஜி.) அணி விளையாட ஒப்பந்தம் செய்தது.

இந்த நிலையில் ஹக்கிமி கடந்த 2020ஆம் ஆண்டு ஹிபா அபூக் என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஜோடி ஒன்றாக வாழ்ந்து வந்ததில் இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், மூன்றாண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, மனைவி ஹிபா விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார்.

மேலும், தமக்கு ஜீவனாம்சமாக கால்பந்து வீரர் ஹக்கிமியின் சொத்தில் பாதி வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். மொராக்கோவில் விவாகரத்து பெறும் பெண்களுக்கு கணவர் சொத்தில் பங்கு அளிக்கும் வகையில் சட்டம் இருப்பதால் ஹக்கிமியின் சொத்தில் பங்கு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த ஹிபாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கால்பந்து வீரர் ஹக்கிமி தாம் வாங்கிய சொத்து, வீடு, பணம் , நகை, கார் என அனைத்தும், தமது பெயரில் இல்லாமல் தனது தாயின் பெயரில் பதிந்து வைத்திருக்கிறார். மேலும், கால்பந்து விளையாடி, அதிலிருந்து வரும் பணமும் தாயின் வங்கி கணக்கில் தான் வைத்து இருக்கிறார். இதனால் ஹக்கிமியின் பெயரில் சொத்து, கையிருப்பு பணம் எதுவும் இல்லை.

இந்த தகவலை நீதிமன்றம் மூலம் ஹிபா பெற்று அதிர்ச்சி அடைந்தார். தன் தாய் மீதான பாசத்தால் ஹக்கிமி செய்த செயல்தான் தற்போது அவரை காப்பாற்றி இருக்கிறது. ஹக்கிமியின் இந்த செயலை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.