இன்று நடந்த நியூசிலாந்து பெண்கள் மற்றும் வங்கதேச பெண்களுக்கிடையேயான டி20 போட்டியில் வங்கதேசத்தை 32 ரன்களில் சுருட்டி, அதிக மார்ஜின் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளது நியூசிலாந்து அணி.
டி20 போட்டி என்றாலே சுவாரசியங்கள் அதிகம் கொண்டது தான், ஆனால் 300 ரன்களுக்கு மேலாக டி20 போட்டியில் குவித்த கதையும், 6 ரன்களுக்குள் சுருண்ட கதையெல்லாம் இருக்கிறது. ஒருமுறை அல்ல இரண்டு முறை டி20 வடிவத்தில் பெண்களுக்கான இண்டர்நேசனல் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேலாக அடிக்கப்பட்டுள்ளது.
2 முறை 300 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்ட போட்டிகள்!
2022ஆம் ஆண்டு ஜிசிசி பெண்கள் டி20 சாம்பியன்சிப் தொடரில் சவுதி அரேபியாவிற்கு எதிரான போட்டியில் பக்ரைன் அணி 20 ஓவர் முடிவில் 1 விக்கெட்டுகள் இழப்பிற்கு 318 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய சவுதி அரேபியா அணி 49 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 269 ரன்கள் வித்தியாசத்தில் பக்ரைன் அணி வெற்றி பெற்றது.
அதற்கு முன் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உகாண்டா மற்றும் மலி அணிகளுக்கிடையேயான போட்டியில் உகாண்டா அணி 20ஓவரில் 314/2 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மலி அணி 10 ரன்களில் ஆல் அவுட்டானது. இறுதியில் உகாண்டா அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. இதுவரையிலான பெண்கள் டி20 போட்டியில் அதிக மார்ஜினில் பெற்ற வெற்றியாக பதிவாகியுள்ளது.
2 முறை 6 ரன்களில் ஆல் அவுட்!
2019-20ல் வங்கதேசம் மற்றும் மலி பெண்களுக்கிடையேயான போட்டியில் 6 ரன்களுக்கு மலி அணியை ஆல் அவுட்டாக்கி அசத்தியது வங்கதேச அணி. மற்றும் அதே வருடத்தில் க்ரவாண்டா அணியை எதிர்கொண்ட மாலத்தீவுகள் அணி 6 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியாவிற்கு பிறகு ஆசியகோப்பையை வென்ற ஒரே அணி 30 ரன்களுக்கு ஆல்அவுட்!
இந்திய அணிக்கு பிறகு ஆசியகோப்பையை வென்ற ஒரே அணியாக இருப்பது வங்கதேச அணி தான். 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி 30 ரன்களில் சுருண்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற நியூசிலாந்து எதிரான போட்டியிலும் 32 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்துள்ளது வங்கதேச அணி.