மாணவர்கள் பரிசுத் தொகை பெறவும் ஆதார் வேண்டுமா என்பது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் விளக்கம் கொடுத்துள்ளார்.
மத்திய அரசு ஆண்டுதோறும் திறமையான 1000 குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் செலவிட உள்ளது. இதனிடையே அவ்வாறு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் பரிசுத் தொகை பெற ஏதுவாகவும், தேசிய போட்டிகளில் பங்குபெறவும் ஆதார் அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என வதந்தி பரவியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், பரிசுத் தொகை பெறும் மாணவர்கள் ஆதார் கட்டாயமாக வைத்திருக்க வேண்டும் என்று கூறப்படுவதை திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். மேலும், ஒருவேளை ஏதாவது பள்ளி பரிசுத்தொகை பெற ஆதாரை கட்டாயம் என்று கூறினால், அதுகுறித்து நிச்சயம் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.