ஐபிஎல் மினி ஏலம் இன்று நடைபெற உள்ள நிலையில், சிஎஸ்கே அணி பல முக்கிய வீரர்களை அணிக்குள் எடுக்கும் முயற்சியில் இருக்கிறது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஐபிஎல் ஏலம் டிசம்பர் 23, இன்று இரவு 8 மணிக்கு நடைபெறவிருக்கிறது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த ஏலத்தில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 405 கிரிக்கெட் வீரர்கள் பங்கு பெறுகிறார்கள்.
இந்திய வீரர்களை பொறுத்தவரையில் அனுபவமுள்ள வீரர்களாக, மயங்க் அகர்வால், அஜிங்க்யா ரஹானே, இஷாந்த் ஷர்மா, மணீஷ் பாண்டே, மந்தீப் சிங், சந்தீப் ஷர்மா, மோகித் சர்மா, கருண் நாயர், ஜெய்தேவ் உனத்கட், சிவம் மாவி, முருகன் அஸ்வின் ஆகியோர் ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
வெளிநாட்டு வீரர்களை பொறுத்தவரையில் கேன் வில்லியம்சன், சாம் கர்ரன், பென் ஸ்டோக்ஸ், அடில் ரஷித், ஜோ ரூட், ரிலீ ரோசோவ், ஜேசன் ஹோல்டர், நிக்கோலஸ் பூரன், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், ஆடம் ஜம்பா மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் பிளாக்பஸ்டர் பட்டியலில் முன்னணியில் உள்ளனர். மேலும் சமீபத்தில் டி20 உலகக்கோப்பையில் கலக்கிய, சிக்கந்தர் ராஷா, ஜோஸ்வா லிட்டில் போன்ற சிறிய அணிகளின் அதிரடி வீரர்களும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் களத்தில் ரூ.20.45 கோடியுடன் இருக்கும் சிஎஸ்கே பல முக்கிய இடங்களை டிக் செய்யும் இடத்தில் உள்ளது. கிட்டதட்ட 60% சதவீத அணியை தக்கவைத்திருக்கும் சூப்பர் கிங்ஸ் அணி மூன்றுவிதமான இடங்களை நோக்கிய ஏலத்திற்கு தான் களமிறங்குகிறது.
சூப்பர் கிங்க்ஸ் தற்போதைய அணி விவரம்:
தொகை மீதம் - 20.45 கோடி| இடங்கள்- 7 | வெளிநாட்டு வீரர்கள் இடங்கள்-2
டாப் ஆர்டர்கள்: ருதுராஜ், டெவான் கான்வே, மொயின் அலி
பினிசர்ஸ்: அம்பத்தி ராயுடு, எம் எஸ் தோனி
ஆல்ரவுண்டர்ஸ்: ஜடேஜா, ஷிவம் துபே, பிரிட்டோரியஸ்
ஸ்பின்னர்ஸ்: மிட்சல் சேண்ட்னர், மஹீஸ் தீக்சனா, பிரசாந்த் சோலங்கி
வேகப்பந்து: தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி
சிஎஸ்கே அணியின் 3 முக்கிய தேவைகள்!
சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரையில், அவர்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் IPL 2022ல் 11.46 எகானமியுடன், டெத் ஓவர்களில் இரண்டாவது மோசமான விகிதத்தை கொண்டிருந்தனர். முகேஷ் சௌத்ரி 13.69, பிரிட்டோரியஸ் 12.70, தீபக் சாஹர் 10.3 எகானமியுடன் கடந்த ஐபிஎல் தொடரை முடித்திருந்தனர். டுவைன் பிராவோ மட்டும் தான், கடந்த ஆண்டு 9.48 எகானமியுடன் 11 விக்கெட்டுகளுடன் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தார். ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ஒரு இடது கை சீமரை அணிக்குள் எடுத்துவரும் முயற்சியில் சிஎஸ்கே அணி இறங்கும் என்று தெரிகிறது. மீண்டும் சிஎஸ்கே சாம் கரன் நோக்கி செல்லவும் வாய்ப்பிருக்கிறது.
பல ஆண்டுகளில், இம்ரான் தாஹிர் சிறப்பாக செயல்பட்ட 2019 சீசனைத் தவிர, சிஎஸ்கே உண்மையில் தங்கள் அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களை விரும்புவதில்லை. ஆனால் அவர்கள் தற்போது லெக்-ஸ்பின் விருப்பமாக பிரசாந்த் சோலங்கியை மட்டுமே வைத்திருக்கும் நிலையில், அவர்கள் நிச்சயமாக இன்னொரு லெக் ஸ்பின்னர் நோக்கியும் செல்லக்குடிய வாய்ப்பு இருக்கிறது.
ராபின் உத்தப்பா ஓய்வுபெற்ற நிலையிலும், என் ஜெகதீசன் மற்றும் ஹரி நிஷாந்த் ஜோடியை சிஎஸ்கே அணி வெளியிட்டு இருக்கிறது. இதனால் அணியில் டெவோன் கான்வே மட்டுமே பேக்அப் விக்கெட் கீப்பராக உள்ளார். அம்பதி ராயுடு மோசமான டொமஸ்டிக் போட்டிகளை கொண்டிருக்கும் நிலையில், அனுபவம் வாய்ந்த மிடில்-ஆர்டர் பேட்டருக்கு சிஎஸ்கே ஒரு பேக்கப் வீரரை எதிர்பார்க்கலாம். அணியில் நான்கு இடது கை வீரர்கள் தங்களின் சாத்தியமான முதல் 6 பொஸிசனில் உள்ளனர். எனவே ஜெகதீசனின் சமீபத்திய வடிவம் சிஎஸ்கே அணி மீண்டும் அவருக்கே செல்லவும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.
சிஎஸ்கே அணி வாங்குவதற்கான சாத்திய வீரர்கள்!
இந்திய மிடில் ஆர்டர் பேட்டரான மனிஸ் பாண்டே, இடது கை வேகப்பந்துவீச்சாளர் சாம் கரன், பேக்கப் விக்கெட் கீப்பர் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் ஜெகதீசன், லெக் ஸ்பின்னரான ஆடம் ஷாம்பா, ஆடம் மில்னே, அடில் ரசீத், மிடில் ஆர்டர் பேட்டர் ஷிகந்தர் ராஷா.
சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் - கேன் வில்லியம்சனாக இருப்பதற்கான வாய்ப்புகள்!
சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்துவரும் எம் எஸ் தோனி, கடந்த சீசனில் கேப்டன் பதவியை இந்திய வீரர் ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு வீரராக மட்டும் பங்கேற்று விளையாடினார். ஆனால் பாதி தொடரின் போது அழுத்தம் காரணமாக ஜடேஜா கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுக்கொண்டார் தோனி. மேலும் வரும் 2023ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடர் தான் தோனிக்கு ஒரு வீரராக கடைசி சீசனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும், 7 வருடங்களாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்தும் விலகியிருக்கும் நியூசிலாந்து ஒயிட் பால் கேப்டன் வில்லியம்சன் தோனிக்கும், சிஎஸ்கே அணியின் அணுகுமுறைக்கும் சரியான வீரராக இருப்பார். மேலும் சிஎஸ்கே அணியின் ஹெட் கோட்ச் ஸ்டீபன் பிளெமிங் ஒரு நியூசிலாந்து வீரராகவும் இருப்பதால் அதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
சிஎஸ்கே கேன் வில்லியம்சன்-ற்கு செல்வதற்கான காரணங்கள்!
* கேன் வில்லியம்சன் விளையாட்டின் சிறந்த தொழில்நுட்ப வீரர்களில் ஒருவர். CSK இன் இன்னிங்ஸைத் தொகுக்கக் கூடிய ஒரு மனிதராக இருக்க முடியும், மேலும் ஆர்டரின் உச்சியில் இருக்கும் மிகவும் ஆக்ரோஷமான ருதுராஜ் கெய்க்வாடுக்கு 3ஆவது இடத்தில் களமிறங்கினால் சரியான காம்போவாக மாறுவார். சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றி விளையாடும் வீரராகவும் உள்ளதால், அவர் எடுக்கப்பட்டால் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
* தோனியைப் போலவே கூலாக முடிவுகளை எடுக்கும் ஒரு சிறந்த கேப்டனாக இருக்கும் பட்சத்தில், வில்லியம்சனில் முதலீடு செய்ய CSK க்கு மிகப்பெரிய ஊக்கமாக இருக்கலாம். 32 வயதான அவர் சர்வதேச அரங்கில் நியூசிலாந்துடன் தேவையான கேப்டன் அனுபவத்தை கொண்டுள்ளார். மேலும் அவர் ஐபிஎல்லிலும் சன்ரைசர்ஸை வழிநடத்தியுள்ளார். வில்லியம்சன் நியூசிலாந்தை 2019 ஐசிசி உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு வழிநடத்தினார். அவர் 2016 இல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் ஐபிஎல் கோப்பையையும் வென்றுள்ளார். வரவிருக்கும் ஐபிஎல் முடிவில் வெளியேறவிருக்கும் எம்எஸ் தோனிக்கு வில்லியம்சன் சரியான மாற்றாக இருக்கலாம்.
*வில்லியம்சன் சிஎஸ்கே பாணிக்கு பொருந்தக்கூடிய ஒரு கேப்டனாக இருப்பார். தோனியை போலவே அவருடைய அணியை அவர் எப்போதும் அதிகம் மாற்றம் செய்யமாட்டார். இந்நிலையில் அவரது தலைமையின் கீழ், CSK அணியின் புதிய தலைமுறை செழித்து, தங்கள் திறனை நிறைவேற்ற முடியும். சிஎஸ்கே மனநிலையும் கிவி பேட்டருடன் ஒத்துப்போகிறது, ஏனெனில் அவர்கள் சமீபத்தில் அதிக அனுபவம் வாய்ந்த அணியைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ராபின் உத்தப்பா, மொயீன் அலி, டுவைன் பிராவோ, அம்பதி ராயுடு போன்றவர்கள் தங்களுக்கு அப்பாற்பட்ட காலகட்டங்களில் அவர்களுக்காக செழித்ததை நாம் பார்த்திருக்கிறோம். அப்படி சிஎஸ்கேவிற்கு வில்லியம்சன் ஒரு வெற்றிக் கதையாகவும் மாறலாம்.