விளையாட்டு

”இவை எல்லாம் கங்குலி அணி தொடங்கியது “- கோலி பேட்டி

”இவை எல்லாம் கங்குலி அணி தொடங்கியது “- கோலி பேட்டி

webteam

இவை அனைத்தும் கங்குலியின் அணியிலிருந்து ஆரம்பித்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்தியா-பங்களாதேஷ் அணிகள் இடையேயான இரண்டவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது. இதன்மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.  

இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசினார். அப்போது, “வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியில் இல்லை என்று நினைத்தால் அது ஒரு தவறான அனுகுமுறையாகவிடும். தற்போது இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுவதை பார்த்தால் அவர்கள் எந்த மண்ணிலும் எந்த ஆடுகளத்திலும் விக்கெட் எடுக்கும் திறமை படைத்தவர்களாக உள்ளனர் என்பது தெரிகிறது. அத்துடன் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். அதேபோல அணியிலுள்ள அனைவரும் மிகவும் ரசித்து கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். அதுவே எங்கள் அணியின் ஒரு முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது. 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மன ரீதியான விஷயங்கள் நிறையே இருக்கும். இதனால் நீங்களை ஆடுகளத்தில் உங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டி இருக்கும். இதனை முதலில் கங்குலியின் அணி தொடங்கியது. அதை தான் நாங்களும் தொடர்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் செய்த கடின உழைப்பிற்கான பயன் தற்போது நன்றாக தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.