108 திவ்ய திருத்தலத்தில் இன்று பணிரெண்டாவது திருத்தலமான கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோவிலை பற்றி பார்க்கலாம்.
இத்திருகோயில், சாரங்கபாணி, சக்கரபாணி ராமசாமி கோவில் ஆகியவற்றை அமையப் பெற்றுள்ளது.
திருகுடந்தை
திருகுடந்தை என்ற பெயர் வந்ததற்கு காரணம் பிரம்மா உலகத்தை படைக்க எண்ணி, இமயமலையில் ஒரு குடத்தில் வித்துக்களை அடைத்து வைத்திருந்தாராம். அந்த குடமானது கங்கை நீருடன் மிதந்து,மிதந்து யமுனை போன்ற நதிகளை எல்லாம் கடந்து இறுதியில் கும்பகோணம் வந்தடைந்தது. அங்கே குடமானது சரிந்து அதில் இருக்கும் விதைகள் எல்லாம் வெளியேறி அங்கிருந்து பிரம்மா தனது படைப்பை ஆரம்பித்ததாகவும் அதனால் அவ்விடத்திற்கு திரு குடந்தை என்ற பெயர் வந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமகம் புகழ்பெற்ற தலம்.
சக்ரபாணி திருக்கோவில்:
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்,
பெருமாள் :சக்ரபாணி,
தாயார்: சுதர்சனவல்லி தாயார்
ஒருமுறை சூரியனுக்கு கர்வம் அதிகரித்து அது அனைவரையும் தனது வெப்பத்தால் சுட்டு துன்புருத்தியதாம். இதனால் தேவர்கள் சூரியனின் வெப்பத்தை குறைக்க பெருமாளிடம் முறையிடவும் பெருமாள் தனது சுதர்சன சக்கரத்தை ஏவினாராம். அது இத்தலத்தில் இருக்கும் சக்கரபடித்துறையில் விழுந்து சக்கரதீர்த்தத்தை உருவாக்கி சூரியனின் வெப்பத்தை தணித்ததாம்.
ராமசாமி திருத்தலம்:
இத்தலத்தை தக்ஷிண அயோத்யா என்று சொல்வதுண்டு. இங்கு ராமர் தனது சகோதரர் லெட்சுமணன், பரதன், சத்ருகணன் ஆகியோருடன் காட்சி அளிக்கிறார். இங்கிருக்கும் ராமர் தனது வில்லை லெட்சுமணனிடம் தர அதனால் இங்கிருக்கும் லெட்சுமணர் தன் கைகளில் இரு வில்லுடன் காட்சி அளிக்கிறார்.
சாரங்கபாணி திருத்தலம்:
இங்கு வில்லை கையில் ஏந்திய பெருமானாக ஆராவ்வமுதன் காட்சி அளிக்கின்றார்.
மூலவர் ஆராவ்வமுதன்
உற்சவ மூர்த்தி சாரங்கபாணி பெருமாள்.
கோமளவல்லி தாயார்.
புஷ்கரணி: ஹேமபுஷ்கரணி.
பிருகு முனிவர் பெருமானின் மார்பில் எட்டி மிதிக்க.. கோபம் கொண்ட நாச்சியார் கோலாபூர் என்ற இடத்தில் தவம் செய்ய புறப்பட்டு விட்டாள். கோபம் கொண்ட தாயாரை சமாதானம் செய்து கூட்டி வர பெருமாள் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ஆகையால் பெருமாள் திருமலையில் வெங்கடேசனாக, பத்மாவதி தாயாருடன் திருமணம் நடைப்பெற இருந்த சமயத்தில் இத்திருமணத்தை பற்றி கேள்வி பட்ட கோலாப்பூரில் தவம் செய்துக்கொண்டிருந்த லெஷ்மி தேவி, வெங்கடேச பெருமாளுடன் சண்டையிட வந்தாளாம் அந்த சமயம், வெங்கடேச பெருமாள், தாயாருக்கு பயந்து ஓடி கும்பகோணத்தில் வந்து ஒளிந்துக்கொண்டாராம் அந்த பெருமாள் தான் பாதள ஸ்ரீநிவாசராக காட்சி அளிக்கிறார்.
இக்கோவிலுக்கு தட்சயாயனம் உத்திராயணம் என்ற இரு வாசல் உண்டு.
பின்பு ஒரு சமயம் கோபம் தணிந்த தாயார் ஹேம மகரிஷிக்கு மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் தெரிவித்தாராம் அதனால் பெருமாள் தேருடன் வந்து, நாச்சியாரை திருமணம் செய்துக்கொண்டாராம்.
7 ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஸ்தலம்.
ஆண்டாள், பேயாழ்வார், பூதத்த்தாழ்வார் திருமழிசையாழ்வார் நம்மாழ்வார் பெரியாழ்வார் திருமங்கையாழ்வார் போன்றவர்கள் பிரபந்தம் எழுதிய திருத்தலம் இது.
“பாலாலி லையில் துயில் கொண்ட பரமன் வலைப் பட்டிருந்தேனை வேலால் துன்னம் பெய்தாற் போல் வேண்டிற் றெல்லாம் பேசாதே கோலால் நிறை மேய்த் தாயனாய்க் குடந்தை கிடந்த குடமாடி நீலார் தண்ண்ந்துழாய் கொண்டு என் நெறி மென்குழல் சூட்டீரே”
திருமழிச்சை ஆழ்வார் நான்முக த்ருவந்தாதி, திருசந்த விருத்தம் போன்ற பலபல பிரபந்தத்தை இங்கு தான் இயேற்றினாராம் . ஆனால் எல்லா பிரபந்தமும் மறைந்து போக அதில் ஒரு பிரபந்தம் மட்டும் நாதமுனிகளின் கைகளில் கிடைக்க... அவர் பின்நாளில் நம்மாழ்வாரை துதித்து 4000 பாடல்களை பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன
(திரு.வேளுக்குடி கிருஷ்ணன் உபன்யாசத்திலிருந்து)