108 திவ்ய தேசத்தில் இன்று நாம் காண இருப்பது திருகண்டியூர். இது தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது. இத்தலத்தில் பிரம்மனின் தலையைகிள்ளிய ஈசனின் பிரம்மஹஸ்தி சாபமானது நீக்கிய ஸ்தலமாக கூறப்படுகிறது.
பிண்டியார் மண்டை ஏந்தி* பிறர்மனை திரிதந்துஉண்ணும்-
உண்டியான்* சாபம் தீர்த்த ஒருவன்ஊர்,* உலகம் ஏத்தும்-
கண்டியூர் அரங்கம் மெய்யம்* கச்சிபேர் மல்லை என்று-
மண்டினார், உய்யல் அல்லால்* மற்றையார்க்கு உய்யல்ஆமே?
பிறர்மனை – அயலாருடைய வீடுகளிலே
திரிதந்து – திரிந்து (பிச்சையெடுத்து)
உண்ணும் – ஜீவித்த
முண்டியான் – மொட்டையாண்டியான ருத்ரனுடைய
சாபம் – ப்ரஹ்மத்திசாபத்தை
என்று சிவபெருமானை பற்றி திருமங்கை ஆழ்வார் திருகுறுந்தாண்டம் பிரபந்தம் இயற்றி உள்ளார்.
ஷேத்ரம்:கமலஷேத்ரம்
தீர்த்தம்:கமலதீர்த்தம்
விமானம்:கமலாக்ருதி விமானம்
பெருமாள்:கமலநாதன், ஹரசாபவிமோட்சனன், மற்றும் பலிநாதபெருமாள் எனவும் அழைக்கிறார்கள்.
தாயார்:கமலவல்லி தாயார்
நரசிம்ம பெருமாளுக்கென்று தனி சன்னதியும் உண்டு.
ஐந்து கமலங்களைக்கொண்டதால் இது பஞ்சகமல சேத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது.
பலிசக்கரவர்த்தி இங்கு வந்து வணங்கபட்ட பெருமாள்
சிவனுக்கு சாபத்தை போக்கியவர்.
புராணக்கதை
பிரம்மாவின் ஒரு தலையை ருத்ரன் கிள்ளி எடுத்தது இங்கு தான், அது என்ன கதை என்று பார்ப்போம்.
பிரம்மா ஒருசமயம் தான் படைத்த பெண்ணின் மீதே ஆசை கொண்டார். அப்பெண் தன்னை காக்குமாறு பார்வதி தேவியிடம் முறையிட, பார்வதி தேவி சிவனிடம் முறையிட, கோபம் கொண்ட ருத்திரன் பிரம்மாவின் ஒரு தலையை கிள்ளிய இடம் இங்கு நடந்ததாக புராணங்கள் கூறுகிறது. அதனால் இங்கு எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு பிரம்ம சிரகண்டீஸ்வரர் என்று பெயர் உண்டு.
பிரம்மனின் தலையை கிள்ளியதால் சிவனுக்கு பிரம்மஹஸ்தி தோஷமானது ஏற்பட்டதால், கமலநாத பெருமாள், அத்தோஷத்தை இத்தலத்தில் நீக்கியதாக புராணங்கள் கூறுகிறது. ஆகயால் இத்தலத்தில் உள்ள பெருமாள் ஹரசாபவிமோட்சனன், எனவும் அழைக்கப்படுகிறார்.
மகாபலி சக்கரவர்த்தி இப்பெருமாளை வணங்கியதாக புராணங்கள் கூறுகிறது. ஆகையால் இப்பெருமாள் பலிநாத பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருகண்டியூர் வந்து பெருமாளையும், ருத்திரனையும், தரிசித்து அவர் அருள் பெருவோம்.