ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன் போர் எதிரொலி: ரஷ்யாவில் சேவையை நிறுத்திய சோனி மியூசிக்

உக்ரைன் போர் எதிரொலி: ரஷ்யாவில் சேவையை நிறுத்திய சோனி மியூசிக்

JustinDurai

ரஷ்யாவில் தங்களது சேவையை நிறுத்துவதாக பிரபல மியூசிக் நிறுவனமான சோனி அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல நாடுகளும் கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் வர்த்தகத்தையும் சேவையையும் தற்காலிகமாக நிறுத்திக்கொள்வதாக அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், ரஷ்யாவில் தங்களின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திக் கொள்கிறோம் என்று பிரபல மியூசிக் நிறுவனமான சோனி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “உக்ரைனில் அமைதி நிலவவும் மற்றும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் சோனி மியூசிக் அழைப்பு விடுக்கிறது. நாங்கள் ரஷ்யாவில் எங்கள் செயல்பாடுகளை நிறுத்திவிட்டோம். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ உலகளாவிய மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கு எங்கள் ஆதரவு இருக்கும்'' என்று தெரிவித்துள்ளது.  

இதனிடையே, சேவை நிறுத்தப்படும் இந்த இடைப்பட்ட காலத்தில் தங்கள் நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

இதையும் படிக்க: உக்ரைனில் மனதை வென்ற 11 வயது சிறுவன் - கண்ணீர் மல்க நன்றி கூறிய தாய்