ரஷ்யா - உக்ரைன்

உக்ரைன்: ஒரு விநாடிக்கு ஒரு குழந்தை ஏதிலியாக வெளியேறுகிறது

உக்ரைன்: ஒரு விநாடிக்கு ஒரு குழந்தை ஏதிலியாக வெளியேறுகிறது

Sinekadhara

போர் காரணமாக, உக்ரைனிலிருந்து ஒரு விநாடிக்கு ஒரு குழந்தை ஏதிலியாக வெளியேறுவதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்யா, பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அண்டை நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர். அதன்படி, இதுவரை 14 லட்சம் குழந்தைகள் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. நாள்தோறும் 70 ஆயிரம் குழந்தைகள் அதாவது ஒரு விநாடிக்கு ஒரு குழந்தை ஏதிலியாக உக்ரைனிலிருந்து வெளியேறி வருவதாக ஐக்கிய நாடுகளின் குழந்கைள் நல அமைப்பான யுனிசெஃப் கவலை தெரிவித்துள்ளது. போர் தொடங்கியது முதல் உக்ரைனிலிருந்து இதுவரை 30 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாகவும் ஐ.நா. கூறியுள்ளது.