பொதுவாக வேலைக்கு செல்வோர் 9 - 5 வேலையைத்தான் எதிர்ப்பார்ப்பார்கள். சனி, ஞாயிறு விடுமுறை, தங்களுக்கான நேரம், குடும்பத்திற்கான நேரம் போன்றவற்றை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் சிலர் இன்னும் கவனமாக இருப்பார்கள்.
இன்னும் சிலர் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும், தனக்கு கீழ் சிலர் வேலை பார்க்க வேண்டும் என்று தொடர் முயற்சிகளை மேற்கொள்வோரும் உண்டு. சொந்தமாக தொழிற்முயற்சி மேற்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களை விட அதிகளவில் சிக்கல்கள் ஏற்படும். கல்யாணம், குழந்தை போன்ற விஷயங்கள் பெண்களை இன்னும் அழுத்ததிற்கு உள்ளாக்கும்.
எனவே புதிதாக தொழில் தொடங்கும் பெண்கள் என்னென்ன தெரிந்து கொள்ள வேண்டும், தொழிலை லாபகரமாக மாற்றுவது எப்படி போன்ற விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்வதற்காக BUSINESS COACH FOR WOMEN விக்னேஷ்வரி கண்ணா Pt prime யூ டியூப் தளத்திற்காக பேட்டி அளித்தார்.