தமிழ்மகன் அவர்கள் பேசுகையில், “1984ம் ஆண்டு நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, இளைஞர் ஆண்டு கொண்டாடப்பட்டது. அதை கொண்டாடும் விதமாக ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்கள், 21 வயதுக்குள் உள்ள இளைஞர்களுக்கான நாவல் போட்டி ஒன்றை நடத்தினார்.
இதற்கு பரிசாக TVS நிறுவனத்தின் TVS-50 ஐ பரிசாக தருவதாக கூறினர். நான் அந்த நாவல் போட்டியில் கலந்துக்கொள்ள முடிவு செய்து விட்டேன்.
என்னுடைய உத்வேகம் என்னவென்றால், என்னுடைய பேராசிரியரான கவிஞர் மு.மேத்தா அவர்கள் அப்போதுதான் சில ஆண்டுகளுக்கு முன் ஆனந்த விகடனில் ‘சோழ நிலா’வுக்கு ஒரு விருது வாங்கியிருந்தார். அதற்கு பரிசாக ரூ. 20,000 பெற்றிருந்தார். அவரைப் பார்த்தாலே எனக்கு பெருமையாக இருக்கும். அதை மனதில்கொண்டு நானும் நாவல் எழுதத்தொடங்கிவிட்டேன்” என்றார்.
இந்த நாவல் போட்டியில் அவர் வென்றாரா? என்ன நடந்தது? செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்!