இந்தியா

ட்விட் செய்த 2 நாளில் குழந்தைக்கு பாஸ்போர்ட்

ட்விட் செய்த 2 நாளில் குழந்தைக்கு பாஸ்போர்ட்

webteam

கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு ட்வீட் செய்த 2 நாட்களில் அந்த குழந்தைக்கு வழங்கப்பட்டது. 

கர்நாடக மாநிலம் சிமோகாவைச் சேர்ந்த அக்ஷதா என்பவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். இவருக்கு அண்மையில் இந்தியாவில் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் ஜெர்மனி செல்வதற்காக அதற்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்தார் அக்ஷதா. பாஸ்போர்ட்டு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

இதை அடுத்து ட்விட்டர் மூலம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுரவாஜூக்கு கோரிக்கை விடுத்தார் அக்ஷதா. அவர் ட்வீட் செய்த 2 நாட்களில் அக்ஷதாவின் குழந்தைக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அக்ஷதா, அமைச்சர் சுஷ்மாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.