இந்தியா

ஊருக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி: ரயிலில் பிறந்த குழந்தை!!

ஊருக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளி: ரயிலில் பிறந்த குழந்தை!!

webteam

மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களும் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளன. பல்வேறு தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அந்த ரயில்கள் மூலம் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இந்நிலையில் குஜராத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகார் சென்ற போது கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடன் இருந்த பயணிகளே பிரசவம் பார்த்துள்ளனர்.

இதனை அடுத்து தனாபூர் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழு தாயையும் சேயையும் மீட்டு மேற்கொண்டு சிகிச்சை அளித்துள்ளனர். இது குறித்து தெரிவித்த மருத்துவர், பயணிகள் உதவியுடன் இந்த பிரசவம் நடந்துள்ளது. ரயில் இங்கு வந்தவுடனே மேற்கொண்டு சிகிச்சையால் பிரசவத்தை நிறைவாக்கினோம். தற்போது தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.