இந்தியா

பாலக்காடு: 6 வயது மகனைக் கொன்ற தாய் - அல்லாவுக்கு அர்ப்பணித்ததாக வாக்குமூலம்!

பாலக்காடு: 6 வயது மகனைக் கொன்ற தாய் - அல்லாவுக்கு அர்ப்பணித்ததாக வாக்குமூலம்!

Veeramani

கேரள மாநிலம் பாலக்காட்டில் தனது 6 வயது மகனை அல்லாவுக்கு தியாகம் செய்வதற்காக, தாயே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

இன்று அதிகாலை 3 - 4 மணி வாக்கில் பாலக்காட்டில் 112 அவசர கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அழைப்பு வந்தது. இந்த அழைப்பில் பாலக்காடு மாவட்டம் புலக்காடு பகுதியைச் சேர்ந்த 30 வயதான ஷாஹிதா, தனது 6 வயது மகன் அமீலை அல்லாவுக்கு தியாகம் செய்வதற்காக கொலை செய்ததாக போலீஸிடம் கூறினார். உடனடியாக உதவி சப் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் ஹாரிஸ் தலைமையிலான போலீஸ்காரர்கள் குழு ஷாகிதாவின் வீட்டை அடைந்தபோது, ஷாஹிதா அவர்களுக்காக வாசலில் காத்திருந்தார். அவள் மீது இருந்த ரத்தத்தைப் பார்த்த போலீசார் வீட்டிற்குள் விரைந்து சென்று குளியலறையில் 6 வயது மகன் இறந்து கிடந்ததைக் கண்டனர், அவரது தொண்டைப்பகுதி வெட்டப்பட்டிருந்தது.

தகவல்களின்படி, ஷாஹிதாவின் கணவர் சுலைமான் மற்றும் இரண்டு குழந்தைகள் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தனர், மேலும் இந்த கொலை குறித்து அவர்களுக்கு தெரியாது என்று கூறப்படுகிறது. அருகிலுள்ள மதரஸாவில் ஆசிரியராக இருக்கும் ஷாஹிதா மூன்று மாத கர்ப்பிணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு வளைகுடாவில் பணியாற்றிய சுலைமான் இப்போது பாலக்காட்டில் ஆட்டோ ரிக்ஷா டிரைவராக பணிபுரிகிறார்.

பாலக்காடு தெற்கு காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, தாய் தனது குழந்தையை  ‘அல்லாவுக்கு’  தியாகம் செய்வதற்காக கொலை செய்ததாக கூறினார். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.