இந்தியா

“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்

“உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால் நிதி கிடையாது” - மத்திய அமைச்சர்

rajakannan

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாவிட்டால், நிதி தர முடியாது  என்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல் நடக்காததால் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஊழல் மலிந்துள்ளது என்று மக்களவை பேசிய திமுக எம்.பி ஆ.ராசா புகார் தெரிவித்தார். இதனையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆ.ராசா எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் அளித்தார். அப்போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்தவில்லை எனில் உள்ளாட்சி அமைப்புக்கான நிதியை விடுவிக்க முடியாது என தோமர் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக திமுகவினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த போது, தேர்தலை நடத்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது. தமிழகத்தில் மூன்று வருடங்களாக உள்ளாட்சி நடத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.