இந்தியா

பொது சட்டத்தை அடுத்து லவ் ஜிகாத் சட்டம்? - சிவராஜ் சிங்கின் சர்ச்சையாகும் அறிவிப்பு

பொது சட்டத்தை அடுத்து லவ் ஜிகாத் சட்டம்? - சிவராஜ் சிங்கின் சர்ச்சையாகும் அறிவிப்பு

Abinaya

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் ’’ லவ் ஜிகாத்’’க்கு எதிராக மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார்.

பழங்குடியினரின் தியாகியான தந்தியா பிலின் தியாக தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்வில் பேசிய மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான்,’ நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய, ஷ்ரத்தா வாக்கரை அவரது காதலன் அஃப்தாப் பூனாவாலா டெல்லியில் கொடூரமாகக் கொன்ற சம்பவம் குறித்து மேற்கொள்காட்டி பேசினார். தன் மகள்களை ஏமாற்றி 35 துண்டுகளாக வெட்ட யாரையும் மாநிலம் அனுமதிக்காது.


நிலத்தை அபகரிக்கும் நோக்கத்தில் பழங்குடியின பெண்களை ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களை தடுக்கும் வகையில், "லவ் ஜிகாத்"க்கு எதிரான சட்டம் வலுப்படுத்தப்படும். இதுபோன்றவை எல்லாம் காதல் அல்ல. இது காதல் என்ற பெயரில் நடக்கும் ஜிஹாத். மத்தியப் பிரதேச மண்ணில் இந்த லவ் ஜிஹாத் விளையாட்டை நான் எந்த வகையிலும் அனுமதிக்க மாட்டேன்’ என்றார்.


முன்னதாக, மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் கூறியிருந்த சிவராஜ் சிங், தற்போது இந்தியாவில் ஒரே மாதிரியான சிவில் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் கூறியிருக்கிறார்.

“சீரான சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது. மத்தியப் பிரதேசத்தில் நான் ஒரு குழுவை (யுசிசி) அமைக்கிறேன். இந்திய அரசியலமைப்பின் 44 வது பிரிவின் கீழ் வரும் ஒரே மாதிரியான சிவில் கோட், அவர்களின் மதம், பாலினம், சாதி போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக பொருந்தும் தனிப்பட்ட சட்டங்களை அறிமுகப்படுத்த முன்மொழிகிறது. இதற்காக மத்திய பிரதேசத்திலும் கமிட்டி அமைக்க உள்ளோம்.


அதன்படி நாட்டில் உள்ள அனைவருக்கும் இனி ஒரே திருமணம். நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நான் முழு ஆதரவாக இருக்கிறேன். திருமணம் போன்ற புனித உறவின் பெயரில் பழங்குடியின சகோதர, சகோதரிகளின் நிலத்தை அபகரிப்பதற்காக ஏமாற்றுபவர்கள், இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, ஏமாற்றுபவர்கள் இந்த தவறுக்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் மீது கிராமசபை கூட அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.

, 'ஒரு நாட்டில் ஏன் இரண்டு சட்டங்கள் இருக்க வேண்டும், ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். மத்தியப் பிரதேசத்திலும் ஒரு குழுவை அமைக்கிறேன். ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தில் ஒரு மனைவி இருக்க உரிமை இருந்தால், அனைவருக்கும் ஒரு மனைவி மட்டுமே இருக்க வேண்டும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்துக் கொண்டால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர் எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது பொருந்தும். 

தேர்தலுக்கு முன் பொது சிவில் சட்டம் தொடர்பான ஒரு பெரிய விஷயத்தைக் கையில் எடுத்துயிருக்கிறார் மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் என விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டு வருகிறது.