Additional DGP Sanjay pt desk
இந்தியா

ஆந்திரா: சந்திரபாபு நாயுடு கைதுக்கு காரணமென்ன? - கூடுதல் டிஜிபி சஞ்சய் விளக்கம்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது தொடர்பாக கூடுதல் டிஜிபி சஞ்சய் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்...

webteam

முறைகேடு வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.3,350 கோடி திட்டத்துக்கு 2015 ஆம் ஆண்டு மாநில அரசு ஒப்பந்தம் செய்தது. இதற்காக ஜெர்மனை சேர்ந்த சீமென் என்ற அமைப்பின் மூலம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்தில் மாநில அரசு 10 சதவீத பங்கை செலுத்த வேண்டும். ஆனால், மாநில அரசின் பங்குத் தொகையில் ரூ.240 கோடி முறைகேடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. போலி பில் மற்றும் இன்வாய்ஸ்கள் மூலம் ஜிஎஸ்டி-யை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தத் திட்டத்துக்கான செலவை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடையே பகிர்ந்தளிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஐ.டி. 2017-18-ல் .ரூ.371 கோடியில் ரூ.241 கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஐடி ரிமாண்ட் அறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த காலங்களில் சிஐடி வழக்குகளை பதிவு செய்த 26 பேருக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் சந்திரபாபு நாயுடு இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

chandrababu naidu arrest

சந்திரபாபு நாயுடு கைது ஏன்? - கூடுதல் டிஜிபி சஞ்சய் விளக்கம்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது தொடர்பாக கூடுதல் டிஜிபி சஞ்சய் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்..

”திறன் மேம்பாட்டு ஊழலில் அரசுக்கு ரூ.300 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் ஒரு ரூபாய் கூட பங்களிப்பு செலுத்தாமல ஆந்திர அரசு ரூ.371 கோடியை முன்பணமாக செலுத்தியுள்ளது. இந்த பணத்தில் 138 கோடி ரூபாய் மாநிலத்தில் ஆறு இடங்களில் திறன் மேம்பாட்டு மைய கட்டிடம் பயிற்சி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ரூ.58 கோடியில் சாப்ட்வேர் வாங்கப்பட்டுள்ளது. 40 கோடி ரூபாய் ஜிஎஸ்டி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை பல ஷெல் (போலி) நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்து பணம் கைமாறப்பட்டுள்ளது. இதில் அதிக பங்களிப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு சென்றுள்ளது.

திறன் மேம்பாட்டு நிதி மோசடியில் சந்திரபாபுவும், தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்களும் செயல்பட்டுள்ளனர். இதில், சந்திரபாபு மகன் லோகேஷ் பங்களிப்பு குறித்தும் விசாரணை நடத்தப்படும். ஏற்கனவே இதில் இ.டி மற்றும் ஜிஎஸ்டி விசாரணை நடத்தி வருகிறது.

இந்த மோசடி குறித்து மேலும் விரிவான விசாரணை செய்யப்பட வேண்டும். இந்த வழக்கில் சந்திரபாபுவுக்கு ஜாமீனில் வெளியே வரமுடியாத மற்றும் பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது” என தெரிவித்தார்.