இந்தியா

யாருக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் இல்லை? என்ன சொல்கிறது மத்திய அரசு?

யாருக்கெல்லாம் ரேஷன் பொருட்கள் இல்லை? என்ன சொல்கிறது மத்திய அரசு?

webteam

உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் ரேஷன் பொருட்களை பெறத் தகுதியானோரை அடையாளம் காண்பதற்காக மத்திய அரசு பல விதிமுறைகளை வகுத்துள்ளது. 

மத்திய அரசின் விதிமுறகள் தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதன்படி யார் யாரெல்லாம் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாது என்ற விபரம் வருமாறு:
குடும்பத்தில் வருமான வரி செலுத்துபவர் ஒருவர் இருந்தாலும் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது. தொழில் வரி செலுத்தும் குடும்பங்களுக்கும் இது பொருந்தும். ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெரிய விவசாயிகளாக வகைப்படுத்தப்பட்டு ரேஷன் பொருட்கள் பெறுவதில் இருந்து நீக்கப்படுவார்கள். மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்றவர்களும் விலக்கப்படுவார்கள். சொந்தப் பயனுக்கு கார் வைத்திருப்பவர்கள், ஏசி பொருத்தியிருப்பவர்களுக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது. சிமென்ட் கட்டடத்தில் 3 அறைகளுக்கு மேல் கொண்ட சொந்த வீடு வைத்திருப்போரும், சொந்த நிறுவனம் நடத்துவோரும் ரேஷன் பொருட்களை பெற இயலாது. ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் கொண்ட குடும்பங்களும் ரேஷன் பொருட்களை பெறத் தகுதியில்லை.