இந்தியா

பேருந்து ஓட்டுநர்கள் செல்போனில் பேசுவதை படம் எடுத்தால் பரிசு

பேருந்து ஓட்டுநர்கள் செல்போனில் பேசுவதை படம் எடுத்தால் பரிசு

webteam

பேருந்து ஓட்டுநர்‌கள் செல்போனில் பேசுவதை புகைப்படம் எடுத்து தரும் பயணிகளுக்கு பரிசளிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. 
பேருந்தை ஓட்டும் போது ஓட்டுநர்கள் செல்போன்களில் பேசுவதை தடுக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக வாட்ஸ் அப் எண்ணையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் சிக்கும் ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் ஸ்வதாந்திரதேவ் சிங், பேருந்தை இயக்கும்போது ஓட்டுனர்கள் செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பது விதி. இந்த விதியை மீறும் ஓட்டுனர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்கவே இந்த திட்டம் என்று தெரிவித்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஓட்டுனருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் முதல் 6 மாதங்கள் சிறைதண்டனை வரை விதிக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் இடமிருப்பதாக அவர் தெரிவித்தார்.