பிரியங்கா காந்தி File image
இந்தியா

வயநாடு இடைத்தேர்தல் | தடம்பதிக்கப் போகும் பிரியங்கா காந்தி! கோட்டையை மீண்டும் கைப்பற்றுமா காங்கிரஸ்?

வயநாடு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

வயநாடு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார்.

காலை 9.30 நிலவரப்படி:

  • காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 51,930 பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் (சிபிஐ) - 14,629

  • பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் - 7613

  • பிற கட்சிகள் - 121

    வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக பார்க்கப்படும் இத்தொகுதியில் வயநாடு எம்.பி., பதவியை ராகுல் ராஜினமா செய்ததால், நவ.,13ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில்தான், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டார். பிரியங்கா காந்தி முதல்முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார் என்பதால் இத்தேர்தல் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இந்தவகையில் இத்தேர்தலின் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.