இந்தியா

"ஒற்றை சிறுநீரகத்துடன் வெற்றிகளைக் குவித்தேன்!" - ஒலிம்பியன் அஞ்சு ஜார்ஜ் நெகிழ்ச்சி

"ஒற்றை சிறுநீரகத்துடன் வெற்றிகளைக் குவித்தேன்!" - ஒலிம்பியன் அஞ்சு ஜார்ஜ் நெகிழ்ச்சி

Veeramani

ஐ.ஏ.ஏ.எஃப் உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற தடகள வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ், ஒரே சிறுநீரகத்துடன் இந்த வெற்றிகளை குவித்ததாக தெரிவித்துள்ளார்.

ஒலிம்பியன் அஞ்சு பாபி ஜார்ஜ் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "நம்புகிறீர்களோ இல்லையோ, நான் ஓர் அதிர்ஷ்டசாலி, ஒரு சிறுநீரகத்துடன் உலகத்தின் உயரத்தை அடைந்த மிகச் சிலரில் நானும் ஒருவர். வலி நிவாரணிகள் கூட எனக்கு ஒவ்வாமை ஏற்படுத்தும், பல கட்டுப்பாடுகள் இருந்த சூழலில்கூட இதனை செய்துள்ளேன். இதனை ஒரு பயிற்சியாளரின் மேஜிக் அல்லது திறமை என்றுகூட அழைக்கிறோம்"என்று கூறியுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த மத்திய விளையாட்டு மந்திரி கிரென் ரிஜிஜு, அஞ்சு தனது கடின உழைப்பு, மனச்சோர்வு மற்றும் உறுதியின் மூலம் இந்தியாவுக்கு பரிசுகளை வென்று தந்தார் என்று கூறியுள்ளார்.

ஒலிம்பியன் அஞ்சு பாபி ஜார்ஜ் 2002ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். பின்னர் அவர் 2007-இல் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்தார். பாரீஸில் 2003 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வரலாற்று சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். இவர் மேலும் பல பதக்கங்களையும் வென்றுள்ளார்.