இந்தியா

ஒரே நேரத்தில் மூன்று பாம்புகளை மீட்கும் முயற்சி - ஆபத்தான நிலையில் பாம்பு மீட்பர்

ஒரே நேரத்தில் மூன்று பாம்புகளை மீட்கும் முயற்சி - ஆபத்தான நிலையில் பாம்பு மீட்பர்

JustinDurai

3 நாகப் பாம்புகள் தலையை உயர்த்தி ஆக்ரோஷத்துடன் நின்று கொண்டிருக்க, அப்போது மாஸ் சயீத் மிகவும் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

கேரளாவின் பிரபலமான பாம்பு மீட்பர் வாவா சுரேஷ், சமீபத்தில் குடியிருப்பில் புகுந்த பாம்பை பிடிக்கும்போது பாம்பால் கடிபட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. பாம்பு பிடிக்கும்போது அவர் அலட்சியமாக செயல்பட்டதாகவும்கூட சர்ச்சை எழுந்தது. இதனிடையே வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த செய்தி தணிவதற்குள், அதேபோன்று கர்நாடகா மாநிலத்திலும் பாம்பு மீட்பர் ஒருவரை பாம்பு தீண்டிய சம்பவம் நடந்துள்ளது.

மங்களூரை சேர்ந்த மாஸ் சயீத் என்ற பாம்பு மீட்பர், ஒரு இடத்தில் 3 நாகப் பாம்புகளை பிடிக்க முயன்றுள்ளார். இந்த பாம்புகள் தலையை உயர்த்தி ஆக்ரோஷத்துடன் நின்று கொண்டிருக்க, அப்போது மாஸ் சயீத் மிகவும் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது. அப்போது அதில் ஒரு பாம்பு சட்டென்று மாஸ் சயீத்தின் கால் மூட்டு பகுதியில் கடித்தது. சில நிமிடங்களிலேயே அங்கேயே மயக்கமான நிலைக்குச் சென்றவரை பொதுமக்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் மாஸ் சயீத் சிகிச்சையில் உள்ளார்.  



மாஸ் சயீத் பாம்பிடம் கடிபடும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஐ.ஃஎப்.எஸ். அதிகாரி சுசாந்தா நந்தா, நாகப்பாம்புகளைக் இவ்வாறு கையாள்வது ஆபத்தானது எனக் கூறியுள்ளார்.