துணை குடியரசுத்தலைவருக்கான தேர்தலில் போட்டியிட 9 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தற்போதைய துணை குடியரசுத்தலைவராக உள்ள ஹமீது அன்சாரியின் பதவி காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளது. இதையாட்டி, துணை குடியரசுத்தலைவருக்கான தேர்தலுக்காக, ஜூலை 4 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதற்காக, கடந்த 4 நாட்களில் இதுவரை 9 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதையடுத்து, புதிய குடியரசுத்தலைவருக்கான தேர்தல் வரும் 17ம்
தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.