இந்தியா

வேட்புமனு தாக்கல் செய்தார் வெங்கய்யா நாயுடு

வேட்புமனு தாக்கல் செய்தார் வெங்கய்யா நாயுடு

webteam

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், துணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வெங்கைய்யா நாயுடு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

துணை குடியரசுத் தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதவி காலம் முடிவடைய இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக, வரும் ஆகஸ்டு மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற இரு சபைகளைச் சேர்ந்த 790 உறுப்பினர்களும் வாக்களித்து, புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்து எடுக்க உள்ளனர். இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. 
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று வெங்கைய்யா நாயுடு வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.