அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் வெங்கையா நாயுடு.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டும் என கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியை தொடர்ந்ததால், அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரித்தார். மேலும், அவையில் பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது, சத்தம் போடுவது போன்ற புகார்கள் வந்துள்ளது. அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த வெங்கையா நாயுடு, பிற்பகல் 12 மணிவரை அவையை ஒத்திவைத்தார்.