இந்தியா

‘காசநோய் இல்லாத இந்தியா’ - சிறுமியை தத்தெடுத்த ஆளுநர் ஆனந்தி பென்

‘காசநோய் இல்லாத இந்தியா’ - சிறுமியை தத்தெடுத்த ஆளுநர் ஆனந்தி பென்

Rasus

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை தத்தெடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச ஆளுநராக இருப்பவர் ஆனந்திபென் படேல். இவர் காசநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை தத்தெடுத்துள்ளார். இவரை பின்தொடர்ந்த ஆளுநர் மாளிமை அலுவலர்கள் சிலரும் கூட காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்தெடுத்துள்ளனர். அதன்படி மொத்தமாக 21 குழந்தைகள் உ.பி. ஆளுநர் மாளிகை அலுவலர்களால் தத்தெடுக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அக்குழந்தைகளுக்கு சரியான மருந்து மற்றும் சத்தான உணவு கிடைக்கும். இதனால் அக்குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்வை மேற்கொள்ள முடியும்.

பிரதமர் மோடி வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளளார். அந்த இலக்கை நிறைவேற்றவே காசநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஆளுநர் மாளிகை தத்தெடுத்துள்ளதாக ஆனந்திபென் படேல் கூறியுள்ளார்.

“குழந்தையை தத்தெடுப்பது என்பது கடமை அல்ல. சமூகத்திற்கு உதவுவதற்கான ஒரு நபரின் பொறுப்பு ஆகும். கொஞ்சம் வசதி படைத்தவர்கள், இதுபோன்ற மக்களின் தேவைக்காக பணத்தை செலவிடலாம். இந்தச் சிறிய சிறிய உதவிகள்தான் ஒரு பெரிய இலக்கை அடைய உதவும்” எனவும் ஆனந்திபென் படேல் கூறியுள்ளார்.