இந்தியா

வாகனங்களின் ஹார்ன், சைரன் சத்தத்தை மாற்ற முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

வாகனங்களின் ஹார்ன், சைரன் சத்தத்தை மாற்ற முடிவு - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

JustinDurai
இந்திய இசைக் கருவிகளின் சத்தம் மட்டுமே வாகனங்களின் ஹார்ன் சத்தமாக பயன்படுத்தப்படவேண்டும் என புதிய சட்டம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
நாசிக்கில் நெடுஞ்சாலை ஒன்றை திறந்து வைத்து பேசிய கட்கரி, ஆம்புலன்ஸ்கள் மற்றும் காவல் துறையினரால் பயன்படுத்தப்படும் சைரன் சத்தங்களையும் அகில் இந்திய வானொலியில் ஒலிபரப்பப்படும் இசை ஒன்றாக மாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருவதாக கூறினார். தற்போது அமைச்சர்களின் வாகனங்கள் கடந்து செல்லும் போது முழு அளவில் சைரன் ஒலிக்கப்படுவதால் மக்கள் எரிச்சலடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து வாகனங்களின் ஹார்ன் சத்தமும் புல்லாங்குழல், தபலா, போன்ற இந்திய இசைக்கருவிகளின் இசையாக மட்டுமே இருக்கவேண்டும் என சட்டம் கொண்டுவர திட்டமிட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.