பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2021 - 2022-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை வாசிக்க உள்ளார். மூன்றாவது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். முதல் முறையாக முழுவதும் டிஜிட்டல் வடிவில் காகித பயன்பாடு இல்லாமல் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
அதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட் போனை பயன்படுத்தி அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்கல் முறை முற்றிலும் மாறுபட்ட வகையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்ய டேப்லெட் போனை பயன்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சி டிஜிட்டல் இந்தியா திட்டம் மற்றும் சுயசார்பு இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் அமைந்துள்ளது.