இந்தியா

கும்பமேளாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் !

கும்பமேளாவுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் !

webteam

இந்தியாவின் கலாசார பாரம்பரியமாக கும்பமேளாவை யுனெஸ்கோ  அங்கீகரித்துள்ளது.

இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு முறை கும்ப மேளா கொண்டாடப்படுகிறது. அலகாபாத், ஹரித்துவார், உஜ்ஜைனி, நாசிக் ஆகிய நான்கு இடங்களில் நடக்கிற கும்பமேளாவில் இந்துக்கள் கூடி, புனித நீராடுகின்றனர். இதை இந்தியாவின் கலாசார பாரம்பரியம் என்று யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது. இதை மத்திய கலாசார துறை அமைச்சர் மகேஷ் சர்மா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

’புனிதமான கும்பமேளாவுக்கு, கலாசார பாரம்பரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம்’ என கூறியுள்ளார்.