இந்தியா

'ஐநா சபையில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு !

'ஐநா சபையில் சீர்திருத்தங்கள் தேவை'- பிரதமர் மோடி பேச்சு !

jagadeesh

விரிவான சீர்திருத்தங்கள் செய்யப்படாததால் ஐக்கிய நாடுகள் சபை தனது நம்பகத்தன்மையை தக்க வைக்கும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் காணொலி முறையில் பிரதமர் மோடி உரையாற்றினார். ஐநா சபை தனது பழமையான கட்டமைப்புகள் மூலம் இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களை எதிர்கொள்ள முடியாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 1945ஆம் ஆண்டு ஏற்படுத்‌தப்பட்ட ஐநா சபையில் மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்பை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஐநா சபை கடந்த 75 ஆண்டுகளில் பலவற்றை சாதித்திருந்தாலும் அதன் முக்கிய நோக்கம் இன்றும் பூர்த்தி ஆகாமலேயே இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர அந்தஸ்து கொடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் ‌வகையில் பிரதமர் மோடியின் பேச்சு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு நடைபெற்ற ஐநா பொதுச் சபை கூட்டத்தில் உலகத் தலைவர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேரில் பங்கேற்காமல் காணொலி மூலம் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.