சபரிமலை விஷயத்தில் பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் மக்களின் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் கருத்தில்
கொள்ளப்படவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள்
அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித் துள்ளது. இதற்கு கேரளாவில் கடும்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.
நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் வரத் தொடங்கியுள்ளனர். நேற்று கோயிலுக்குச் சென்ற
பெண்கள் வழியிலேயே போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்களை தடுக்கும் வகையில் சபரிமலைக்குச்
செல்லும் வழிகளான எருமேலி, பம்பை, நிலக்கல், பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் ஐயப்ப பக்தர்கள், ஐயப்ப சமாஜம்
அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். நிலக்கல்லில் சபரிமலைக்கு
வரும் பெண்களின் கால்களில் விழுந்து கோயிலுக்குச் செல்ல வேண்டாம் என போராட்டக்காரர்கள் கேட்டுக் கொண்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை கலைப்பது மற்றும் கைது செய்யும் நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டனர். பலத்த
பாதுகாப்புடன் பெண்களை அழைத்துசெல்ல காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். அசம்பாவிதங்களை தடுக்க சபரிமலை
செல்லும் வழிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சபரிமலையில் கோயிலின் அடிவாரப்பகுதியான
நிலக்கல்லில் பெண்களை அனுமதிக்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி
நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் காவலர் கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக் காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல்
ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் தொடர் தடியடியில் ஈடுபட்டு போராட் டக்காரர்களை கலைத்தனர். போராட்டத்தினால்
நிலக்கல், பம்பை உள்ளிட்ட நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக் கப் பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நாளை வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கேரளாவில் இன்று முழுஅடைப்புக்கு சபரிமலை கோவில் பாதுகாப்பு குழு அழைப்பு
விடுத்துள்ளது. அதன்படி முழு அடைப்பு நடந்து வருகிறது. திருவனந்தபுரம், கோழிக்கோடு பகுதியில் அரசு பஸ்கள் மீது கல் வீசி
தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவரான மோகன் பகவத், சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று கருத்து
தெரிவித்துள்ளார் அதில் " சபரிமலை விஷயத்தில் ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நியதிகளும், ஆன்மீக
பெரியவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைகளும் கருத்தில் கொள்ளப்படவில்லை. சமுதாயத்தின்
கருத்தை அறியாமல் எடுக்கப்படும் எந்த முடிவும், மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. சமுதாயத்தில் எந்த விதமான
மாற்றத்தையும் அதுஏற்படுத்தாது. சபரிமலை தொடர்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பு விஷயத்திலும் அதுவே நிலை. சபரிமலை
விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சமுதாயத்தில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும், பிளவையும் ஏற்படுத்தியுள்ளது. ஏன்
ஹிந்து சமுதாயத்தின் நம்பிக்கைகள் மீது மட்டுமே இத்தகைய தாக்குதல்கள் நடைபெறுகின்றன என பொது மக்கள் மத்தியில்
கேள்விகள் எழுகின்றன" என்றார் மோகன் பகவத்.