இந்தியா

மேகத்தை நோக்கிச் சென்ற நீர்... கிழக்கு கோதாவரி பகுதியில் ஏற்பட்ட நீர்த்தாரை!

மேகத்தை நோக்கிச் சென்ற நீர்... கிழக்கு கோதாவரி பகுதியில் ஏற்பட்ட நீர்த்தாரை!

EllusamyKarthik

புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றான ஏனாம் பிராந்தியத்தில் Tornado என சொல்லப்படும் நீர்த்தாரை ஏற்பட்டுள்ளது. 

ஆந்திராவின் கோதாவரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ஏனாமில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி அளவில் அங்குள்ள புது ராஜீவ் நகர் பகுதியில் இருக்கும் இறால் பண்ணை ஒன்றில் திடீரென சூழல் காற்று வீசியுள்ளது. அப்போது அந்த இறால் பண்ணையின் குட்டையில் இருந்த நீர் அப்படியே மேகத்தை நோக்கி ஈரக்கப்பட்டுள்ளது. சுழல் காற்றின் விளைவாக பண்ணையின் குட்டையில் இருந்த இறால்களும், வலைகள் மற்றும் சில உபகரணங்கள் உட்பட அனைத்தும் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.

சுமார் பதினைந்து நிமிடங்கள் வரை ஏற்பட்ட இந்த சுழல் காற்றினால் அந்த பகுதியிலிருந்த வீடுகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்பு அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இதனை அந்த பகுதி மக்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன்பு பைரவ பாலத்தில் கடலில் உருவான சூறாவளியைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் அமெரிக்காவில் காணப்படும் நீர்த்தாரை கிழக்கு கோதாவரியில் தோன்றியதை பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர்.