இந்தியா

ஃபாஸ்டேக் இல்லையெனில் நாளை முதல் எவ்வளவு கட்டணம் தெரியுமா?

ஃபாஸ்டேக் இல்லையெனில் நாளை முதல் எவ்வளவு கட்டணம் தெரியுமா?

Rasus

ஃபாஸ்டேக் இல்லையெனில் நாளை முதல் இருமடங்கு கட்டணத்தை வாகன ஓட்டிகள் செலுத்த நேரிடும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையாக, ஃபாஸ்டேக் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. வங்கிகள், சுங்கச்சாவடிகள், தனியார் சேவை மையங்களில் ஆதார் அட்டை மற்றும் வாகனங்களின் ஆர்.சி. நகலைக் கொடுத்து ஃபாஸ்டேக் மின்னணு அட்டைகளை வாகன ஓட்டிகள் எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வாகன ஓட்டிகள் ஃபாஸ்டேக் முறைக்கு மாறாதபட்சத்தில், நாளை முதல் இருமடங்கு கட்டணத்தை செலுத்த நேரிடும்.

இதனிடையே ஃபாஸ்டேக்கை பயன்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக குற்றம்சாட்டும் வாகன ஓட்டிகள், ஃபாஸ்டேக் நடைமுறைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.