தலைப்புச் செய்திகள் puthiya thalaimurai
இந்தியா

காலை தலைப்புச் செய்திகள் | இடைக்கால பட்ஜெட் கூட்டம் முதல் சர்ஃபராஸ் கானின் டெஸ்ட் வாய்ப்பு வரை!

இன்றைய காலை தலைப்புச் செய்தியானது இடைக்கால பட்ஜெட் கூட்டம் முதல் மதுரை விமான நிலையத்தில் கூடுதலாக வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணம் வரை நேற்றைய மற்றும் இன்றைய நிகழ்வுகள் பலவற்றை விவரிக்கிறது.

PT WEB

இன்றைய காலை தலைப்புச் செய்திகள்:

  • பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தம்.

  • தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டும் திமுக. வரும் 3 ஆம் தேதி கம்யூனிஸ்ட், 4 ஆம் தேதி மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஆலோசனை.

  • தமிழகத்தில் திமுக - அதிமுக கூட்டணி மட்டுமே இருக்கும் என திருமாவளவன் கருத்து. 3வது அணி உருவானால் அது அணியாகவே இருக்காது என்றும் பேட்டி.

  • I.N.D.I.A கூட்டணி போன்று திமுக கூட்டணியும் சிதறும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம். பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என மீண்டும் விளக்கம்.

  • எடப்பாடி பழனிசாமியை தவிர அதிமுகவில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து களம் இறங்கினால் வெற்றி உறுதி - முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி.

  • ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு. சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை.

  • திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களுக்கு இன்று முதல் கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து துறை அறிவிப்பு.

  • மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார். அரை மணி நேரத்துக்கு 20 ரூபாய்க்கு பதிலாக 60 ரூபாய் கேட்பதாக குற்றச்சாட்டு.

  • வரும் ஒன்றாம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது. சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்கள் விலை பத்து ரூபாயும், உயர் ரக மதுபானங்கள் விலை 20 ரூபாயும் அதிகரிப்பு.

  • இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல், ஜடேஜா விலகல். சர்ஃப்ராஸ் கான், வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம்.