இந்தியா

கவனம் ஈர்க்கும் அமேசான், கேட்பரி நிறுவன விளம்பரங்கள் - குவியும் பாராட்டுகள்!

கவனம் ஈர்க்கும் அமேசான், கேட்பரி நிறுவன விளம்பரங்கள் - குவியும் பாராட்டுகள்!

கலிலுல்லா

தீபாவளிக்கு வெளியாகியுள்ள விளம்பர வீடியோக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அமேசான் பிரைம், தீபாவளி பண்டிகையையொட்டி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளது. கவனம் ஈர்க்கும் அந்த வீடியோவில் மிர்சாபூர் இணைய தொடர் பிரபலமான கலீன் பையா (Kaleen Bhaiyya) நடித்துள்ளார். அந்த வீடியோ, தீபாவளி அன்று 'அமேசான் பிரைம்' ஓடிடி தளத்தில் உள்ள படங்களை பார்க்க வேண்டாம் என்பதை வலியுறுத்துகிறது. எந்த நிறுவனமும் செய்ய துணியாததை அமேசான் பிரைம் நிறுவனம் செய்துள்ளது. அந்த வீடியோவில், 'நாளை அமேசான் பிரைம் நம்முடன் தான் இருக்கப்போகிறது.

நாம் அதை பின்பு கூட பார்த்துக்கொள்ளலாம். ஆனால் தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது. ஆகவே அன்றைய நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள்' என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. இது 'நெகட்டிவ் பப்ளிசிட்டி' என கூறப்பட்டாலும், அமேசானின் இந்த முயற்சி பாராட்டப்பட்டு வருகிறது.

இதேபோல, 'கேட்பரி டைரிமில்க்' விளம்பரமும் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வீடியோ 'தீபாவளிக்கு உள்ளூர் கடைகளில் பொருட்களை வாங்குங்கள்' என்பதை வலியுறுத்தும் வகையில் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. NotJustACadburyAd என்ற பெயரில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் பெரும் நஷ்டங்களை சந்தித்த இந்தியாவில் உள்ள உள்ளூர் கடைகளுக்கு கேட்பரி நிறுவனம் உதவ விரும்புகிறது என்பதை, அதன் சமூக ஊடக சேனல்கள் முழுவதும் தொடர்ச்சியான வீடியோக்கள் மூலம் அது விளக்குகிறது.

இதுபோன்ற விளம்பரங்களின் முன்னெடுப்புகள் பலரையும் ஈர்த்துள்ளது; நல்ல வரவேற்பும் பெற்றிருக்கிறது.