மத்தியக்கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தலைநகர் டெல்லியில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உத்தராகண்ட், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒடிசா, பஞ்சாப், சத்தீஷ்கர், மேற்குவங்கம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக டெல்லியில் பரவலாக கனமழை பெய்துவருகிறது. பலத்த மழையால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளானார்கள்.