இந்தியா

`உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக இவர்...’ பரிந்துரைத்த தற்போதைய தலைமை நீதிபதி!

`உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக இவர்...’ பரிந்துரைத்த தற்போதைய தலைமை நீதிபதி!

webteam

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி யு.யு. லலித் பரிந்துரை செய்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியான லலித் வரும் நவம்பர் எட்டாம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தனக்கு அடுத்து யார் தலைமை நீதிபதியாக வர வேண்டும் என்ற பெயர் பரிந்துரையை அவர் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். அதேநேரம், தற்போது உச்சநீதிமன்றத்தின் அடுத்த மூத்த நீதிபதியொருவரின் பெயரைத்தான் அவரால் பரிந்துரையாக வழங்க முடியும். அந்த வகையில் நீதிபதி சந்திரசூட் பெயரை லலித் பரிந்துரைக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

இதற்கான மரபுப்படி உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கான அறையில் இன்று காலை 10.15 மணிக்கு அனைத்து நீதிபதிகளுடனும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தலைமை நீதிபதி யு.யு. லலித், அடுத்த தலைமையாக சந்திரசூட் பெயரை பரிந்துரைத்து அதற்கான கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார். இந்த பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாகவும் உச்ச நீதிமன்றத்தின் நீண்ட நாள் பணிபுரியும் தலைமை நீதிபதியாகவும் சந்திரசூட் இருப்பார்.

ஏற்கனவே கடந்த அக்டோபர் ஏழாம் தேதி மத்திய சட்டத்துறை அமைச்சகம் தற்போதைய தலைமை நீதிபதியிடம் அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வருமானத்துக்கு அதிகமாக சொத்துகுவிப்பு வழக்கு: ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்