5 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை நியாய விலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையாக விளங்கும் ரேசன் கடைகளின் நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்த கூட்டம் காணொலி மூலம் நடைபெற்றது. அதில் பேசிய மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சுதான்ஷு பாண்டே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் ஆர்வமுள்ள மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்படும் என கூறினார். இதற்கு எரிபொருள் நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். ரேஷன் கடைகள் மூலம் நிதி சேவைகள் வழங்கும் திட்டமும் பரிசீலனையில் இருப்பதாக நிதி சேவைத்துறை அதிகாரி கூறினார்.